
வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது என பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமுக வலைத்தளமொன்றில் நேற்று (07.03.2024) அவர் வெளியிட்டுள்ள காணொலியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த காலங்களில் இலங்கையில் பௌத்த விகாரைகளுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
தமிழ்க் கட்சிகளின் அரசியல்வாதிகள்
மேலும், இவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகமாக நடைபெறுகின்றது.
இவ்வாறான செயற்படுகளுக்கு காரணம் அப்பாவி தமிழ் மக்கள் அல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகளின் அரசியல்வாதிகளே இதற்கு காரணம்.
அவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மனதில் மதவாதத்தை தூண்டி அவர்களை தங்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள்.
அவர்களை பௌத்த விகாரைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.
எனவே, வவுனியாவின் வடுன்னாகலையில் பௌத்த விகாரைக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தை உடனே தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும், வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது எனவும் நான் கோரிக்கை விடுக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா உட்பட இருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: