News Just In

3/07/2024 07:03:00 PM

நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு முதலுதவிப் பயிற்சி!



நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம் மருதமுனை ஹெல்பிங் ஹண்ட்ஸ் சமூக சேவை நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் ஹெல்பிங் ஹண்ட்ஸ் நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு முதலுதவி பயிற்சிகளை வழங்குமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பூரண ஒத்துழைப்புடன் Helping Hands நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி பயிற்சி செயலமர்வு அண்மையில் (02) மருதமுனை பொது நூலகக்கட்டிடத்தில் இடம்பெற்றது.

Helping Hands சமூக சேவை நிறுவனம் மற்றும் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருமான எம்.ஐ.எம்.முஹர்ரப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் மற்றும் தொற்றா நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாத் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

இதன்போது குறித்த நிறுவனத்தின் சார்பில் 40 பேர் கலந்துகொண்டதுடன் கலந்துகொண்ட சகலருக்கும் சான்றுதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: