News Just In

2/23/2024 04:44:00 PM

நீதி அமைச்சர் அம்பாரை மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயம்.!




(எஸ்.அஷ்ரப்கான்)

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அம்பாறை மாவட்டத்திற்கான இரண்டு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.குறித்த விஜயத்தின் போது தீகவாபி ரஜமஹா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இன நல்லிணக்கம் தொடர்பான (ONUR) வேலைத்திட்டத்தினை மீண்டும் மார்ச் மாதம் ஆரம்பிக்கவிருப்பதாக இவ்விஜயத்தின் போது குறிப்பிட்டிருந்தார்.

இங்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜெயரத்னவும் கலந்துகொண்டதுடன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.ஜெகதீசன், அட்டாளச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முஷாபிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


No comments: