News Just In

2/03/2024 08:03:00 PM

தவராசாவுடன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் சந்திப்பு!





இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்துரையாடிய விடயங்கள் வௌியாகவில்லையெனவும், அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக் கட்சித் தலைவர் பதவிக்காக எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சிறிதரன், முன்னாள் எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் கடந்த 21ஆம் திகதி தமிழரசுக் கட்சித் தலைவராக எஸ்.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டார்.

No comments: