News Just In

2/08/2024 07:23:00 PM

37 கோடி பெறுமதியான மாணிக்ககற்கள் மீட்பு!




இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 நீலக் மாணிக்கக் கற்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்கள் சுமார் ரூ. 37 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்த நிலையில் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணிக்கக் கற்கள் விகாரை வடிவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: