இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன்தான். தமிழரசுக் கட்சியின் மகாநாடு மாத்திரமே பிற்போடப் பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது சட்ட ரீதியாக இயங்கும். நாம் எவ்வித குழப்பமும் விளைவிக்கவில்லை சிலர் எம்மை தங்களது சுய இலாபத்துக்காக குழப்பவாதிகள் போல் காட்ட முனைகின்றர்ர்கள். மட்டக்களப்புக்கு செயலாளர் பதவி கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை சாணக்கியனுக்கு கிடைக்க கூடாது என்று தங்களது முதிர்ச்சி அற்ற தன்மையினை காட்டிருன்தனர் சிலர்.
நேற்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக் குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பொன்று இன்று களுவாஞ்சிகுடியில் உள்ள எனது காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது தெரிவுகளின் போது நடைபெற்ற பல விடயங்களின் உண்மைத்தன்மை பற்றி இவ் ஊடக சந்திப்பில் எடுத்துரைத்துள்ளேன்
No comments: