News Just In

1/16/2026 06:03:00 PM

கொக்கட்டி சோலையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

கொக்கட்டி சோலையில் மாட்டுப்பொங்கல்சிறப்பாகஅனுஷ்டிக்கப்பட்டது.


(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)

 உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கின்ற காளைகள்,எருதுகளுக்கு நன்றி செலுத்தும். மாட்டுப் பொங்கல் விழா மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதற்கமைய மாட்டுப் பொங்கல் விழா கொக்கட்டிச் சோலை அரசடிதீவில் நடைபெற்றது.

பண்ணையாளர் முத்துலிங்கம் கந்தசாமியின் பண்ணை வளவில். தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் திருமதி வனிதா செல்லப்பெருமாள் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது. இப்பண்ணையில்காளைகள் அலங்காரம் செய்யப்பட்டு. விசேட பூஜை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில். பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர் தேவப்போடி ரவேந் திரன். அரசடிதீவு பிரஜா சக்தி தலைவர் கோகுல் ரமணன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் திருமதி வனிதா செல்லப்பெருமாள்.;- இன மத வேறுபாடின்றி. பண்டிகைகள். மற்றும் சமய அனுஷ்டானங்களை அனுஷ்டிக்க. இன்றைய அரசாங்கம் எந்த தடங்கலும் செய்யவில்லை.

இதன் அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வட மாகாணத் தில் நடைபெறும். தைப்பொங்கல் விழாக்களில். ஆர்வத்துடன் பங்கேற் றுள்ளார்.

வடபகுதி சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயகவுக்கு வடமாகாண மக்கள். மகத்தான வரவேற்பளித்து கௌரவித்துள்ளனர்.

இவ்வாறான நல்ல விடயங்கள்நடப்பது இந்த நாட்டில் மக்களாட்சி மலர்ந்தி ருப்பதை உணர்த்துகிறது.எனக்குறிப்பிட்டார்

No comments: