News Just In

4/25/2026 05:52:00 AM

மாணவர்களின் தலையை வைத்து விளையாடிய சலூன்கள்? சீல் வைக்கப்பட்ட கடைகள் மட்டக்களப்பில் நடவடிக்கை

மாணவர்களின் தலையை வைத்து விளையாடிய சலூன்கள்? சீல் வைக்கப்பட்ட கடைகள் மட்டக்களப்பில் நடவடிக்கை 



பாடசாலை மாணவர்களுக்கு 'ஸ்டைல்' என்ற பெயரில் விசித்திரமாக முடி வெட்டிவிட்ட சலூன்களுக்கு மட்டக்களப்பில் அதிரடியாகப் பூட்டுப் போடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு சிகை அலங்கார நிலையங்கள், மாணவர்களுக்கு நேர்த்தியான முறையில் முடி வெட்டாமல், ஒழுங்கற்ற முறையில் முடி வெட்டியதாகப் புகார்கள் எழுந்தன.

பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து,பிரதேச சபை தவிசாளர் மே.வினோராஜ் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்களுக்கு முறையாக முடி வெட்டாதது உறுதி செய்யப்பட்டதை அடுத்து சலூன் உரிமையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த இரண்டு சிகை அலங்கார நிலையங்களும் தற்காலிகமாகப் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

"மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கலாசாரத்தைப் பாதிக்கும் வகையில் சிகை அலங்காரங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

சட்ட விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments: