News Just In

1/28/2024 03:25:00 PM

வெள்ளவத்தை கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!




வெள்ளவத்தை ரயில் நிலையத்தை அண்மித்த கடல் பகுதிக்கு செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முதலை ஒன்று சுற்றித்திரிவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கும் பலகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை என்பதால் ஏராளமானோர் அந்த கடல் பகுதிக்கு வந்து செல்வதுடன் சிலர் தங்கள் பிள்ளைகளுடன் நீராடுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

எனினும் அந்த இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவு அதிகாரிகள் கடற்கரைக்கு வரும் மக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

இதனால் அங்கு செல்பவர்கள் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

No comments: