News Just In

1/12/2026 06:27:00 PM

வடக்கு, கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!

வடக்கு, கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!



தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

எனவே விவசாயிகள் அதற்கேற்ற வகையில் தங்களுடைய அறுவடைச் செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது.

மத்திய, மேல், சபரகமுவா, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும் எதிர்வரும் 15.01.2026 வரை மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இரவில் வெப்பநிலையில் ஏற்படும் வீழ்ச்சியும், ஈரப்பதன் மாற்றமும் குளிரான வானிலையை ஏற்படுத்துகின்றன. இந்த நிலைமை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: