News Just In

1/13/2026 10:14:00 AM

விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்த வயோதிப தம்பதியினர் - மட்டக்களப்பில் துயரம்

விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்த வயோதிப தம்பதியினர் - மட்டக்களப்பில் துயரம்



மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், அவரது 73 வயதுடையுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் தீராத நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை மேற்கொண்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: