News Just In

1/05/2024 03:48:00 PM

பிள்ளையானின் நடவடிக்கையால் சிரமத்தை எதிர்நோக்கும் மயிலத்தமடு பண்ணையாளர்கள்!



இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மயிலத்தமடுவில் பொலிஸ் காவலரன் அமைக்கப்பட்டமையால் பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

மயிலத்தமடுவில் பொலிஸ் காவலரன் அமைத்தால் கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தீர்மானம் ஒன்றை எடுத்து இருந்தார்.

இதற்கு பல எதிர்ப்புகள் வந்திருந்தபோதிலும் குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த மாதம் மயிலத்தமடு பகுதியில் பொலிஸ் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது அத்துமீறிய பயிற்செய்கையாளர்களுக்கு ஆதரவாக அங்குள்ள பொலிஸ் காவலரன் செயற்படுவதாகவும் காலாகாலமாக மேய்ச்சல் தரையாக பயன்படுத்திய இடங்களில் கால்நடைகளை மேய்க்கவிடாமல் குறிப்பிட்ட வட்டாரத்திற்குள் அவற்றை பராமரிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

கால்நடைகளுக்காக மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட நிலத்தில் அத்துமீறிய குடியேற்றவாசிகள் விவசாயம் செய்ய ஆதரவு வழங்கும் விதத்தில் இந்த செயற்பாடு அமைந்துள்ளது. பொலிஸ் காவலரன் ஒன்று அமைத்தால் அத்துமீறிய குடியேற்ற வாசிகளுக்கு பாதுகாப்பு வழங்கலாம் என்ற எண்ணத்தில் பிள்ளையான் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டாரா என்ற கேள்வி தற்போது பண்ணையாளர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

No comments: