News Just In

1/10/2024 06:44:00 PM

வேட்டையர் ஒருவரை துண்டு துண்டாக்கிய காட்டு யானை!

வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரோதமான முறையில் வேட்டையாடச் சென்ற வேட்டைக்காரர்கள் குழுவொன்று காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

யானையின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டது.

வில்பத்துவ தேசிய வனப் பூங்காவின் புக்குளமவை அண்மித்த பகுதியில் நேற்று (09) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த வேடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் - மரிச்சிகட்டி பகுதியைச் சேர்ந்த கப்பாடயன் மொஹமட் என்ற 55 வயதுடைய நபரே காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

வேட்டையர்கள் கடல் மார்க்கமாக மீன்பிடி படகுகளை பயன்படுத்தி குதிரைமலை முனைக்கு அருகில் இருந்து வில்பத்து தேசிய பூங்காவிற்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது, ​​வேட்டையர்கள் குழு யானைக்கூட்டமொன்றிடம் சிக்கியுள்ளனர். யானைக்கூட்டம் பிடித்ததுடன், அதில் ஓரு யானை மாத்திரம் வேட்டையர்களை துரத்த தொடங்கியுள்ளது.

இதன்போது, வேட்டையாட வந்தவர்களில் ஒருவர் யானையிடம் சிக்கியதாகவும், யானை அவரை மிதித்து கொன்று உடலை துண்டு துண்டாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் வயிற்றின் மேல் பகுதி ஒரு இடத்தில் இருந்தும் கால்கள் வேறு இடத்தில் இருந்தும் வனவிலங்கு அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் கண்டுபிடித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வில்பத்துவ சரணாலயத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த ஏனைய வேட்டைக்காரர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: