ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் கையளித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக நேற்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்ததை அடுத்து கௌரவ சமிந்த விஜேசிறி அவர்கள் இவ்வாறு இராஜினாமா கடித்தைக் கையளித்துள்ளார்.
அதற்கமைய, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்படும்.
No comments: