News Just In

1/02/2024 05:06:00 PM

உயர் கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்க நடவடிக்கை - உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்




அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் உத்தரவாதம் மற்றும் நிலைபேறான விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு (29) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்றது.

உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சுரேன் ராகவனின் தலைமையில் உயர் கல்வி அமைச்சின் அரச சார்பற்ற பிரிவு இச்செயலாளர் ஒழுங்கு செய்திருந்தது.

இந்நிகழ்வில் அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் வேந்தர்கள், பேராசிரியர்கள் உட்பட கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது செயலமர்வின் விசேட விருந்தினர்களுக்கான உரையை நீதிமன்ற சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் பேராசிரியர் விஜயதாச ராஜபக்ஷங்கர் வழங்கினார்.

அரசியலமைப்பு சட்டத்தில் கல்விக்காக அனைவருக்கும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்றும் அம்மறுசீரமைப்பின் கீழ் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை தரம் பத்து மற்றும் உயர் தரப் பரீட்சை தரம் பன்னிரெண்டிலும் நடாத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இம்மறுசீரமைப்பின் கீழ் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்காக அதிக அவதானம் செலுத்தும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இதற்காக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் மேலும் குறிப்பிட்டார்.

No comments: