News Just In

1/04/2024 11:49:00 AM

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரிடம் இலஞ்சம் பெற்ற பெருமளவு பொலிஸார்!




இலங்கையின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரரான நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்து பணம் சம்பாதித்ததாக கூறப்படும் 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களை கைது செய்ய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பூரண மேற்பார்வையில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்படவுள்ள பெரும்பாலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் தென் மாகாணத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹரக்கட்டாவுடன் நடத்தப்பட்ட தொலைபேசி உரையாடல்களும் அது தொடர்பான ஒலிநாடாக்களும் தற்போது கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பொலிஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்தும் பொலிஸார் ரகசிய விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

No comments: