News Just In

1/26/2024 10:56:00 AM

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு!



மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், நாவலடியில் திருமணம் செய்து வசித்து வந்தார். அவர் வெள்ளிக்கிழமை (26) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments: