News Just In

1/18/2024 10:21:00 AM

துமிந்த சில்வா குறித்து சிறைச்சாலை ஆணையாளர் வெளியிட்ட தகவல்!



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

எனினும், பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை சட்டரீதியானதல்ல என நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் துமிந்த சில்வா ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துமிந்தவின் உடல் நிலை குறித்து மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையை கோர உள்ளதாகவும், அவர்கள் பரிந்துரைத்தால் துமிந்த சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

No comments: