கிழக்கில் பெய்துவரும் அடை மழை காரணமாக காரைதீவு பிரதான வீதி கடந்த 12 வருடங்களுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காரைதீவு மாவடி பள்ளி வீதி முற்றாகவே நீரில் மூழ்கியுள்ளதால் வீத்யால் பயணைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் வெள்ளம் கரைபுரண்டோடி வீதியை மூடியுள்ளது.
அதேவேளை இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டில் இத்தகையதொரு வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
காரைதீவு - அக்கரைப்பற்று வீதி காரைதீவு - அம்பாறை வீதிகளில் வெள்ளம் பாய்வதால் குறித்த வீதியில் போக்குவரத்துக்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை.
No comments: