News Just In

1/13/2024 12:22:00 PM

இலங்கை வந்த போலந்து தம்பதியின் பெருந்தொகை பணம் திருட்டு!

வஸ்கடுவ பிரதேசத்தில் சுற்றுலா விடுதி அறையொன்றில் இருந்து போலந்து தம்பதியின் பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 32250 இலங்கை ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

ஈவா மோனிகா மஜேவ்ஸ்கா ஸ்டானிஸ் என்ற 47 வயதான போலந்து பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வெளிநாட்டு ஜோடி நேற்று சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: