பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான கூட்டு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமான 1700 ரூபாவினை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)
No comments: