நாட்டில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துவிதமான பிரச்சினைகளும் நீடித்துக்கொண்டிருப்பதற்கு பௌத்த தேரர்களே காரணமாக உள்ளனர் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் நிரந்தரமான சமாதனம் ஏற்படுவதற்கு நாம் எப்போது தடைகளை ஏற்படுத்தவில்லை.
அனைத்து மக்களும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உலகத்தமிழர் பேரவையிடத்தில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
பௌத்த தேரர்கள் ஒருங்கிணைந்த சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்றுக்காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டதோடு, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடல்களில் கலந்துக்கொண்டனர் .இந்தச் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
No comments: