News Just In

12/10/2023 07:58:00 PM

உயர்தர மாணவிகளின் பாட அறிவை மேம்படுத்தும் முகமாக பௌதிகவியல் செய்முறை பயிற்சி முகாம் !




நூருல் ஹுதா உமர்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) உயர்தரப் பிரிவில் பௌதிகவியல் பாட அறிவினை மேம்படுத்தும் முகமாக SESIP நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் விஞ்ஞான பிரிவு ஆசிரியர்கள், மாணவிகளினால் முன்னோடுக்கப்பட்ட "பௌதிகவியல் செய்முறை பயிற்சி முகாம்" உயிரியல் பெளதிக விஞ்ஞான பிரிவு கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் முகமாக றிபன் நாடாவினை வெட்டி கல்லூரியின் முதல்வர் ஏ.பி. எப். நஸ்மியா சனூஸ் ஆரம்பித்து வைத்தார். உயர்தர உயிரியல் பௌதிக விஞ்ஞான பிரிவில் காணப்படும் ஆய்வு ௯ட வளங்களை பயன்படுத்தி ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவிகள் மிக சிறப்பான முறையில் விளக்கமாளித்தனர். மேலும் கல்லூரியின் ஏனைய பிரிவு மாணவர்களும் இக் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர் என்.டி. நதீகா உயர்தர விஞ்ஞான பிரிவு ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments: