News Just In

12/07/2023 08:10:00 AM

கொழும்பு தாமரை கோபுரத்தில் சுழலும் உணவகம்!

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள சுழலும் உணவகத்தை நாளை மறுதினம் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தெற்காசியாவிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் ஒரே நேரத்தில் 225 முதல் 250 பேர் வரை இருந்து உணவு உட்கொள்ள முடியும்.

இந்த உணவகம் நாளை மறுதினம் மாலை 7.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்படும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் .திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த உணவகம் பகல் மற்றும் இரவு உணவிற்காக திறந்திருக்கும், அதற்கமைய, சுழலும் உணவகம் மதிய உணவிற்காக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் இரவு உணவிற்காக மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த பார்வையாளர்கள் மூலம் 14 மாத காலப்பகுதிக்குள் 1025.9 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments: