மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டமெங்கும் கடும் மழை பெய்து வருகிறது.
சீரற்ற வானிலை காரணமாக கடும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக காத்தான்குடி மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாததால் மீன் பிடி படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன.
கரையோரத்தில் அமைந்துள்ள மீன்பிடி வாடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
No comments: