News Just In

12/08/2023 03:02:00 PM

கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டொலர் அதிகரிப்பு!



 இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டொலர் அதாவது இந்திய மதிப்பில் 83,000 கோடி ரூபா அதிகரித்துள்ளதாக Bloomberg-ஐ மேற்கோள்காட்டி The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டொலரை எட்டியுள்ளது.

சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து, உலக செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Adani Green Energy, Adani Total Gas, Adani Enterprises உள்ளிட்ட 10 நிறுவனங்களும் இரண்டாவது வாரமாக இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாவதை அடுத்தே கௌதம் அதானியின் சொத்து மதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, மும்பையிலுள்ள தாராவியில் இருக்கும் குடிசைகளை இடித்துவிட்டு, அங்கு அடுக்கு மாடி குடியிருப்புகளைக் கட்டும் திட்டம், அதானி நிறுவனம் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை எதிர்க்கும் வகையில், எதிர்வரும் 16 ஆம் திகதி தாராவியிலிருந்து அதானி அலுவலகத்திற்கு பேரணி நடத்தவுள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

No comments: