ராஜபக்ச சகோதரர்கள் நாட்டிற்கு வெளியே வைத்துள்ள பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களும் அவரது சகாக்களுமே காரணம் என உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்து.
எனினும், அவர்களிடம் இழப்பீடு கோரவில்லை. மனுதாரர்கள் இழப்பீடு கோரவில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இழப்பீடு செலுத்துமாறு ராஜபக்ச சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். ஏனெனில், அவர்களால் அதனை செலுத்தியிருக்க முடியும்.
ராஜபக்ச சகோதரர்கள் இலங்கைக்கு வெளியே வைத்திருக்கும் பணத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.
நாட்டிற்கு வெளியே வைத்துள்ள அனைத்து பணத்தையும் மீண்டும் கொண்டு வர முடியும். அந்த பணத்தால் தான் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும்.
முன்னாள் ஜனாதிபதி, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் பொதுப் பணம் திருடப்பட்டதாலேயே நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்கவும், திருடப்பட்ட பணத்தை திறைசேரிக்கு கொண்டு வரவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு கோருவதற்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
No comments: