சனல் 4 விவகாரம் தொடர்பில் அதிகமாக பேசப்பட்டு வந்த அசாத் மௌலானா மற்றும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா ஆகிய இருவரையும் வெளிநாடுகளில் புலனாய்வாளர்கள் பின்தொடர்வதாகவும் அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, அமரர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் தொடர்புடைய நபரென குற்றஞ்சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட கஜன் மாமா என்று அழைக்கப்படும் ரங்கசாமி கனகநாயகத்திற்கு ஏற்பட்டது இயற்கை மரணமில்லை என்ற பகீர் தகவலையும் முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் செவ்வி ஒன்றுக்கு நேர்காணல் வழங்க இருந்துள்ளதாகவும் இதனை தடுக்கும் முகமாக திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
No comments: