
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நஸீர் அஹமட் நீக்கப்பட்டதை உறுதி செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சுமார் 25 பேருக்கு எதிராக இதேபோன்ற ஒழுக்காற்று நடவடிக்கையை தீவிரமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
நசீர் அஹமட் கட்சியை விட்டு வெளியேறி அரசாங்கத்தில் சுற்றாடல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, தமது கட்சியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் தீவிரமாக பரிசீலிக்கிறோம் என்று பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்ற வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தேர்தல் நோக்கங்களுக்காக தமது கட்சியுடன் இணைந்திருந்தமையால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, அனுர யாப்பா போன்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்ட கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிப்போம், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: