News Just In

9/20/2023 01:28:00 PM

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் இன்று மீளகையளிப்பு


மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் இன்று மீளகையளிப்பு




இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று (20) அதன் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் அதன் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், பொது முகாமையாளர் எஸ்.எம்.தாஹிர், ஹிராஸ் பவுன்டேசன் அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி, அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸஹவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments: