
-- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தேற்றாத்தீவில் ஞாயிற்றுக்கிழமை(03.09.2023) லை இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனை பக்கம் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும், மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை பக்கம் நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும், ஒன்றோடு ஒன்று மோதியதாலே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை நேரில் அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரு மோட்டர் சைக்கிளிலும் தனித் தனியாக பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்துச் சம்பவத்தில் வேன் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: