News Just In

9/10/2023 09:53:00 AM

ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி படைத்துள்ள சாதனை!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிய அணி என்ற சாதனையை இலங்கை அணி படைத்துள்ளது.

நடப்பு வருடத்தில் இலங்கை அணி இந்த சாதனையை படைத்துள்ளது.

21 வெற்றிகளுடன் அவுஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.இந்த வெற்றியை அந்த அணி 2003 ஆம் ஆண்டு படைத்துள்ளது.

இலங்கை அணி நடப்பு வருடத்தில் 13 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 2007 -08 காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி 12 வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: