News Just In

9/21/2023 10:03:00 AM

தேசிய மட்டம் தெரிவான சாதனையாளர்களுக்கு கௌரவம்.!

தேசிய மட்டம் தெரிவான சாதனையாளர்களுக்கு கௌரவம்.



நூருல் ஹுதா உமர்
கல்வி அமைச்சினால், அண்மையில் நடத்தப்பட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில், மாகாண மட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்பு இன்று அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியின் இன்றைய தினம் காலை ஆராதனையின் போது மாகாண மட்டத்தில், Creative Wiring இல் முதலிடம் பெற்ற தரம் 9 இனைச் சேர்ந்த சி. ஆர்.மாக் அஹ்மத், மாகாணப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற தரம் 13 இனைச் சேர்ந்த என். பாத்திமா அறுாப், சிரேஸ்ட நாடகப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நாடக் குழுவினர்களுக்கான பதக்கங்கள், கல்லுாரி முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் ஆசிரியர்கனால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை குறித்த மாகாணப் போட்டியில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் இம்மாதம் இடம் பெறும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.


No comments: