-
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பில் சமூக சகவாழ்வுக்கான 5 செயல்திட்டங்களைச் செய்ய தேசிய சமாதானப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இடம்பெற்ற மாவட்ட சர்வமத செயற்குழுவின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
சமூகங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வை வலுப்படுத்தும் விதமாக சமாதானத்திற்கான செயற்திட்டங்களைச் செய்து முடிப்பதற்கான ஆலோசனை அமர்வு ஞாயிறன்று 24.09.2023 மஞ்சந்தொடுவாய் சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க, கிறிஸ்தவரல்லாத, பௌத்த மதங்களைப் பிரதிநிதித்துவப்டுத்தும்; மாவட்ட சர்வமதப் பேரவை செயற்குழுவின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இவ்வருட இறுதிக்குள் செய்து முடிக்கப்பட வேண்டிய தேசிய சமாதானப் பேரவையின் இன நல்லிணக்கத்துக்காக முன் மொழியப்பட்ட ஐந்து செயற்திட்டங்களை செய்து முடிப்பது சம்பந்தமான திட்டமிடல்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மனோகரன், சமூகங்களுக்கிடையிலான சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணிவருவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் செயல்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
அந்த வகையில் மாவட்ட சர்வமதப் பேரவையினால் இவ்வருட இறுதிக்குள் மூன்று செயல் திட்டங்களும், மாவட்ட சர்வ மதப் பேரவையின் உபகுழுக்களான இளைஞர் மன்றத்தினால் ஓரு செயல் திட்டமும் உள்ளுராட்சி மன்றப் பெண் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் வலுவூட்டல் செயற்பாட்டாளர்களின் குழுவினால் மற்றுமொரு செயல் திட்டமும் அமுலாக்கப்படவுள்ளன.
இவையனைத்தும் சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம் ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டிக்காக்கும் விடயங்களுக்காக செய்து முடிக்கப்படுகின்றன.” என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீட், செயல் குழுவின் செயலாளர் ஏ.எல். அப்துல் அஸீஸ், ஒருங்கிணைப்புச் செயலாளர் கே. சங்கீதா உட்பட பேரவையின் செயல்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments: