News Just In

8/30/2023 07:54:00 AM

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய ஜனநாயகப் போராட்டம்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினம் 30/08/2023 நாளை உலகளாவிய ரீதியில் அனுட்டிக்கப்படவுள்ளது. எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான, நீதி கோரிய ஜனநாயகப் போராட்டமானது சமூக அமைப்புக்களினால் நாளைய தினம் மு.ப 9.00 மணிக்கு கல்லடிப் பாலத்தில் இருந்து காந்திப்பூங்கா வரை நடைபவனியாக நடாத்தப்படவுள்ளது. இதற்கான முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தமிழரசுக்கட்சி வழங்குகின்றது. அன்றைய தினம் உணர்வுபூர்வமான எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு பலம் அளிக்குமாறு உரிமையோடு எமது உறவுகளின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments: