News Just In

8/22/2023 03:11:00 PM

எலைட் கழகத்துடனான கலந்துரையாடல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்.






நூருல் ஹுதா உமர்
மனாரியன் 88 அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மருதமுனை எலைட் விளையாட்டு கழகத்துடனான சினேகித பூர்வமான கலந்துரையாடல், பர்வின் ட்ரடிங் நிறுவனம் மற்றும் லதான் அக்ரோ இண்டர்நேசனல் நிறுவன பணிப்பாளர் அல் ஹாஜ் கலில் முஸ்தபா அவர்களுடன் மருதமுனை பிரதான வீதி அமைந்துள்ள முஸ்தபா கம்பளைஸ் நிறுவன காரியாலயத்தில் 2023.08.21 ஆம் திகதி திங்கள் மாலை இடம்பெற்றது.

மேலும் எலைட் விளையாட்டு கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இதன்போது எலைட் விளையாட்டு கழக வளர்ச்சிக்காக விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.




No comments: