News Just In

8/22/2023 03:42:00 PM

மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் !



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பில் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி ஏ.அமலநாயகி தெரிவித்துள்ளார்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்ட சங்கங்களும் குறித்த போராட்டத்தில் இணையவுள்ளன. இந்த போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள், பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவ அமைப்புகள், தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: