News Just In

8/21/2023 10:33:00 AM

கல்வி சுற்றுலாவில் ஏற்பட்ட விபத்தில் மாணவன் பலி!




கல்வி சுற்றுலாவிற்காக தஹம் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல மலையை நோக்கி செல்லும் குறுக்கு வீதியில் நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வௌியே தலையை நீட்டிய போது மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments: