News Just In

8/16/2023 10:52:00 AM

சுற்றாடல் கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டலும் தொப்பி அணிவித்தலும்!





நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் சுற்றாடல் கழக மாணவர்களுக்கு சின்னம் சூட்டலும் தொப்பி அணிவித்தல் மற்றும் அடையாள அட்டை விநியோகமும் கல்லூரி அதிபர் ஐ.உபைதுல்லா தலைமையில் கல்லூரி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 25 மாணவர்கள் இச்சுற்றாடல் கழகத்தில் இணைந்து சூழலைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். "சுற்றாடலை பாதுகாப்போம் சுற்றாடல் நம்மை பாதுகாக்கும் " எனும் தொனிப்பொருளில் மாணவர்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments: