குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாமென்ற இந்திய புலனாய்வுபிரிவின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ய வேண்டாமென உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு - குருந்தூர்மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்து தகவல்களை திட்டுமாறும் புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருந்தூர் மலை தொடர்பில் உடனடி மதக்கலவரம் சாத்தியமென்ற இந்திய புலனாய்வு பிரிவினரின் எச்சரிக்கையை தொடர்ந்தே உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
No comments: