News Just In

8/23/2023 06:33:00 PM

சந்திரனின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான் -3 : சரித்திரம் படைத்த இந்தியா!


இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் நிலவில் சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியது.
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 14, 2023 அன்று ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

முன்னதாக லேண்டரை தரையிறக்குவதற்கான சிஸ்டம்களை அடிக்கடி சரிபார்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

சரியாக 5.44 மணிக்கு, விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சி தொடங்கியது. அப்போது விக்ரம் லேண்டர் மணிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் இயக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

லேண்டரை தரையிறக்கும் போது, நிலவின் ஈர்ப்புவிசை மிக முக்கிய பங்கு வகித்ததால், அதற்கு ஏற்ற வகையில், லேண்டரின் வேகத்தை கட்டுத்தப்படுத்தும் பணிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டனர்.

அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை இலங்கை நேரப்படி 6.03 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் விண்வெளி உலகில் ஜாம்பவான் பட்டத்தை இந்தியா பெற்றுக்கொண்டது.

இந்நிகழ்வை தென் ஆப்ரிக்காவில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரோ குழுவினருடன் இணைந்து பார்த்தார்.

No comments: