News Just In

8/11/2023 10:59:00 AM

வெள்ளவத்தையில் நடந்த துயரம் - 24 வயது தமிழ் இளைஞன் மரணம்




வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: