News Just In

8/04/2023 05:56:00 PM

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் திருடப்பட்ட இரும்பு -22 பேர் கைது!

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடப்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டது.

இது குறித்த விசாரணையின் கீழ் காங்கேசன்துறை பொலிஸாரால் 22பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை திருடப்பட்ட இரும்புகளும் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு குறித்த தொழிற்சாலையில் இரும்பு திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments: