News Just In

7/03/2023 03:01:00 PM

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!


லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை(04.07.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த அறிவிப்பை இன்று(03.07.2023) வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாயை விட குறைக்கப்படலாம் என அவா் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 3,186 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாயை விட குறைக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 598 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: