மட்டக்களப்பு மாவட்டம் - ஏறாவூர் வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் சடலமொன்று வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் அறிவித்துள்ளது.
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியோரம் இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை 5 மணியளவில் விபத்துக்குள்ளான நிலையில் காணப்பட்ட முதியவர் 1990 அம்புலன்ஸ் மூலம் ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஏறாவூர் வைத்தியசாலையில் இனங்காணப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை இனங்காண உதவுமாறு வைத்தியசாலை பொதுமக்களை வேண்டிக் கொண்டுள்ளது.
No comments: