News Just In

6/10/2023 03:58:00 PM

பொறுமையின் எல்லையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ! --- சிவஞானம் சிறீதரன் M. P .




எதிா்வரும் ஜூலை மாத இறுதிக்குள் தமிழ் மக்களின் அரசியல் தீா்வுக்கான பேச்சுவாா்த்தை ஒரு கட்டத்தை அடையும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளாா்.

குறித்த கால இடைவௌிக்காக காத்திருப்பதாக தொிவித்த அவா், தமிழ் மக்களின் அரசியல் தீா்வு தொடா்பில் பொறுமையின் எல்லையில் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தனால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த சந்திப்பில் காணிவிடுவிப்பு தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும், தேர்தல் தொடர்பாகவும், சிறையில் இருக்கும் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறீதரன் தொிவித்துள்ளாா்

No comments: