News Just In

5/12/2025 06:39:00 AM

சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய வலைமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கை

சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய வலைமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கை


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

செல்வநாயகம் நினைவு அறக்கட்;டளையின் அனுசரணையில் தேசிய மட்டத்தில் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய வலைமைப்பை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமாதான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற செயற்பாட்டாளர்களைக் கொண்டு சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வலையமைப்பொன்றை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையில் வலைமையப்பைக் கட்டமைப்பதற்கான முன்னாயத்த நிகழ்வு சனிக்கிழமை 10.05.2025 வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இலங்கையின் நாலாபுறங்களிலுமிருந்தும் வந்திருந்த தமிழ்பேசும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சிரேஷ்ட வளவாளராக ஏ. சொர்ணலிங்கம் கலந்து கொண்டு செயலமர்வை நடத்தினார்.

பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக நிறுவனங்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடுவதற்கான தளம் ஒன்றினை உருவாக்கல், பிரதேசங்களில் ஏற்படுக்கூடிய தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு இணைந்து தீர்வுகளைக் கண்டு கொள்ளுதல், தேசிய மட்டத்தில் சமாதானத்திற்காகச் செயற்படும் ஏனைய வலைப்பின்னல் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னாயத்த நிகழ்வகள் இடம்பெற்று வருவதாக செல்வநாயகம் நினைவு அறக்கட்;டளையின் திட்ட வளவாளர் எஸ். திலீபன் தெரிவித்தார்.

செயலமர்வின் இறுதியில் இவ்வலையமைப்பானது சமாதமானம் சார் செயற்பாடுகளில் தொடர்ந்து முன்கொண்டு செல்லும் வகையில் ஏழு பேர் கொண்ட தற்காலிக இணைப்புக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளை தந்தை செல்வா அவர்களின் நினைவாகவும் யுத்தத்திலிருந்து மீண்டெழும் தமிழ் பேசும் மக்களின் வல்லமையின் எடுத்துக் காட்டாகவும் இந்த மகோன்னத பணியைக் கருத்திற் கொண்டு தந்தை செல்வா கலையரங்கு 01.07.2019 அன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

அன்று தொடக்கம் இன்றுவரை பல்லின சகவாழ்வு, சமாதான நடவடிக்கைகளுக்காகவும் யுத்தத்திலிருந்து மீண்டெழும் தமிழ் பேசும் மக்களின் வல்லமையின் எடுத்துக் காட்டாகவும் தந்தை செல்வா அறக்கட்டளையின் தாராள பங்களிப்புடனும் அந்த நிலையம் இயங்கி வருகிறது.

தந்தை செல்வா அறக்கட்டளை மூலம் அறிவுசார் கல்வி, சமாதானம், பாதிக்கப்பட்ட மக்களின் கலை கலாசார பண்பாட்டு மீட்சி, சமாதான எண்ணக்கருக்களை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகம் தொடர்ந்தும் இத்தகைய சமூக அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அதன் செயற்பாட்டாளர்கள் nரிவிக்கின்றனர்

குறிப்பாக சமாதான எண்ணக்கரு குறித்து தனிமனித செயற்பாடும் அடுத்த தலைமுறையினருக்கு சமாதானத்தை நோக்கிய அகன்ற பார்வையைக் கொண்டு சேர்ப்பித்தலும் இடம்பெறவேண்டும். இந்த செயற் திட்டத்திற்கு அர்ப்பணிப்பதாக அறக்கட்டளையின் எதிர்கால செயற்பாடுகள் முனைப்புப் பெறும் என்றும் செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இனங்களுக்கிடையே சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் இன்றியமையாதது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்

No comments: