50 பெண்களை ஏமாற்ரி திருமணம் செய்து பல லட்சம் மோசடி செய்த 55 வயது மன்மதன் கைதான சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் தபேஷ் குமார் பட்டாசார்யா (55). இவர் 1992இல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி மற்றும் மகள்களை விட்டு தலைமறைவானார். அதன் பின்னர் கர்நாடகா மாநிலம் பெங்களுருவுக்கு சென்ற இவர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரையும் ஏமாற்றியுள்ளார்.
அதோடு மேட்டரிமோனி இணையதளம் மூலம் விவகரத்து ஆன பெண்கள், கணவரை இழந்த பெண்களை குறிவைத்து தனது வலையில் சிக்க வைத்துள்ளார்.
அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து முதலிரவு முடிந்தவுடன் அவர்களிடம் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்த மன்மதன் ,கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநில பெண்களை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒடிசாவில் தலைமறைவாக இருந்த தபேஷை கைது செய்தனர்.
கைதான சந்தேக நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 55 வயதில், 50 பேரை மோசடி செய்து திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments: