
யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்துள்ளது.தற்போது சமூக ஊடகங்களில் நாகபாம்புகள் வலம் வந்து படம் எடுக்கும் காட்சி பகிரப்பட்டு வருகிறது.
இதேவேளை நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய மகோற்சவம், நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments: