News Just In

6/04/2023 04:30:00 PM

இலங்கையில் அதிகரித்து வரும் பழங்களின் விலை!

இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் அனைத்து வகையான பழங்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டிலுள்ள பொருளாதார மையங்களில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை அதிகரித்துக் காணப்படுகின்றன.

அந்தவகையில், கடந்த 2022ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாகங்களில் 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 75 ரூபா தொடக்கம் 100 ரூபாவாக இருந்தது.

தற்போது 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 350 ரூபாவாக உள்ளது.

அதாவது 1 கிலோ ஆப்பிள் 1350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

1 கிலோ பப்பாசிபழம் 3830 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

1 கிலோ சிவப்பு திராட்சை 1,572 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

1 கிலோ புளி வாழைப்பழம் 250 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் தோடம்பழத்தின் விலை 817 ரூபாவாகவும்

ஒரு கிலோ கிராம் பச்சை ஆப்பிள் பழத்தின் விலை 836 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோடம் பழத்தின் விலை 600 ரூபா,

ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 தொடக்கம் 750 ரூபாவாகவும், ஒரு கிலோ கொய்யாவின் விலை 750 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments: